Bruce lee biography in tamil free download


புரூசு லீ

லீ ஜூன் ஃபேன் புரூஸ் (Lee Jun-fan) (நவம்பர் 27, 1940 – ஜூலை 201973) இவரின் திரைப்படப் பெயரான புரூஸ் லீ என பரவலாக அறியப்படும் ஆங்காங் மற்றும் அமெரிக்கத்திரைப்படநடிகர், இயக்குநர் (திரைப்படம்), தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர்கள், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார்.[1] இவரின் பெற்றோர் கன்தோனிஸ் ஆபரா , லீ ஹோய் சுன். இவர் ஊடகவியலாளார்கள், விளக்கவுரையாளர்கள், விமர்சகர்கள், மற்றும் தற்காப்புக் கலைஞர்களால் அனைத்துக் கால தற்காப்புக் கலைகளில் சக்திவாய்ந்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார்[2]. 20-ஆம் நூற்றாண்டின்பரப்பிசைபண்பாடு கால குறி உருவமாகப் பார்க்கப்பட்டார்.[3][4]

புரூஸ் லீ சான் பிரான்சிஸ்கோ, சைனா டவுனில் நவம்பர் 27, 1940 இல் பிறந்தார். இவர்களின் பெற்றோர்ஆங்காங்கில் பிறந்து கவுலூனில் குடியேறினர். இவரின் தந்தையால் இவர் திரைஉலகத்திற்கு அறிமுகம் ஆனார். சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தனது 18 ஆவது வயதில் மேற்படிப்பிற்காக அமெரிக்க ஐக்கிய நாடு சென்றார். சியாட்டில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு பயின்ற சமயத்தில் தற்காப்புக் கலைகளை பயிற்றுவித்தார்.[5] இவரின் ஆங்காங் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்கள் ஆங்காங்கின்பாரம்பரியதற்காப்புக் கலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் புதுமையான வடிவத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.1970 களில் சீன சண்டைக் கலைகள் பற்றிய தாக்கம் அதிகரித்தது. இவரின் புதுவகையான இயக்கும் பாணியானது அமெரிக்க ஐக்கிய நாடு, ஆங்காங் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்புக் கலைகள் பற்றிய திரைப்படங்களின் தாக்கத்தில் மாற்றம் ஏற்படச் செய்தது.[6]

இவர் 1971 இல் லோ வீ இயக்கிய த பிக் பாஸ், 1972 இல் ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி, கோல்டன் ஹார்வஸ்ட் இயக்கிய ராப்ர்ட் கிளவுஸ் இயக்கத்தில்[7] வே ஆஃப் தெ டிராகன், 1978 இல் தெ கேம் ஆஃப் தெ டெத் போன்ற திரைப்படங்களின் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவர் உலக அளவில் குறிவுருவமாக பார்க்கப்பட்டார், குறிப்பாக இவரின் திரைப்படங்களில் சீன தேசியக் கருத்துகள் அதிகம் இருந்ததனால் சீனர்களால் குறிவுருவமாகப் பார்க்கப்படுகிறார்.[8] இவர் துவக்கத்தில் விங் சுன் எனும் சீன சண்டைக் கலைகளில் பயிற்சி எடுத்தார். இவர் ஆங்காங் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளார்.[9] புரூஸ் லீ ஆங்காங்கிலுள்ள கௌலூன் டாங்கில் தனது 32 ஆம் வயதில் சூலை 20, 1973 இல் மரணமடைந்தார்.[10]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

புரூஸ் லீ நவம்பர் 27, 1940 இல் சான் பிரான்சிஸ்கோ, சீன நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்தார். சீன சோதிடத்தின் படி இவர் பிறந்த ஆண்டு மற்றும் நேரம் ஆகிய இரண்டும் டிராகன் (சீன சோதிடம்) ஆகும். அவர்களின் மரபு படி இது வலிமையான சகுனமாகப் பார்க்கபப்டுகிறது[11]. புரூஸ் லீ மற்றும் இவரது பெற்றோர் , இவருக்கு மூன்று வயது இருக்கும் போது மீண்டும் ஆங்காங்கிற்கு சென்றனர்.[12]

புரூஸ் லீயின் தந்தை லீ ஹோய் சுன் ஹான் சீனர், தாய் கிரேச் ஹோ , பறங்கியர் மரபைச் சேர்ந்தவர்[13].கிரேஸ் , ஹோ கோம் தாங் மற்றும் சர் ராபர்ட் ஹோ தங் தம்பதியின் தத்து எடுத்த குழந்தை ஆவார். இவர்கள் இருவரும் ஆங்காங்கின் குறிப்பிடத் தகுந்த தொழில் முனைவோர், மற்றும் வள்ளல் ஆவர்.[14] புரூஸ் லீயின் பெற்றோருக்கு பெபே லீ, ஆக்னஸ் லீ, பீட்டர் லீ, புரூஸ் லீ, ராபர்ட் லீ ஆகிய ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவர்களில் புரூஸ் லீ நான்காவதாகப் பிறந்தார்.

பெற்றோர்

[தொகு]

புரூசின் பெற்றோர் பற்றிய குறிப்புகள் தெளிவாக இல்லை. லிண்டா லீ, தனது 1989 ஆம் ஆண்டு எழுதிய தி ப்ரூஸ் லீ ஸ்டோரி, என்ற சுயசரிதையில் லீயின் தாயார் கிரேசுக்கு ஒரு ஜெர்மன் தந்தை இருந்ததாகவும், அவர் கத்தோலிக்கராக இருந்ததாகவும் கூறுகிறார்.[15] 1994 ஆம் ஆண்டு புரூஸ் தாமஸ் என்பவர் எழுதிய புரூஸ் லீ: ஃபைட்டிங் ஸ்பிரிட் என்ற சுயசரிதையில், கிரேஸுக்கு ஒரு சீனத் தாயும் ஒரு ஜெர்மன் தந்தையும் இருந்ததாகக் கூறுகிறார்.[16] லீயின் உறவினர் எரிக் பீட்டர் ஹோ, தான் 2010 ஆம் ஆண்டு எழுதிய ட்ரேசிங் மை சில்ட்ரன்ஸ் லினேஜ் என்ற புத்தகத்தில், கிரேசுக்கு சாங்காயில் சியுங் கிங்-பாவம் என்ற யூரேசியப் பெண்ணுக்குப் பிறந்தார் என்று கூறுகிறார். எரிக் பீட்டர் ஹோ, கிரேசு ஒரு கலப்பு இனம் சாங்காயின பெண்ணின் மகள் என்றும் அவரது தந்தை ஹோ கோம் டோங் என்றும் கூறினார். கிரேசு லீ தனது தாயார் ஆங்கிலம் என்றும், அவரது தந்தை சீனர் என்றும் கூறினார்.[17][18]

பெயர்கள்

[தொகு]

லீயின் தாயார் லீ யூன்-பேன் (李振藩) என்று பெயரிட்டார்.[19] இதற்கு "மீண்டும் திரும்பு" என்று பொருள்படும் மேலும் லீக்கு அவரது தாயார் வழங்கினார், அவர் பெரியவனானதும் அமெரிக்காவிற்கு செல்வார் என்று உணர்ந்தார்.[20] அவரது தாயின் மூடநம்பிக்கை காரணமாக, அவர் முதலில் அவருக்கு ஒரு பெண்ணின் பெயரான சாய்-ஃபோன் (細 鳳) என்று பெயரிட்டார், இது "சிறிய பீனிக்ஸ் " என்று பொருள்படும் .[21] "புரூஸ்" என்ற ஆங்கில பெயர் மருத்துவமனையில் மருத்துவர் டாக்டர் மேரி குளோவரால் வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது.[22]

குடும்பம்

[தொகு]

லீயின் தந்தை, லீ கோய்-சுவென், அந்த நேரத்தில் முன்னணி கான்டோனீஸ் ஓபரா மற்றும் திரைப்பட நடிகர்களில் ஒருவராக இருந்தார், மேலும் ஆங்காங்கில் சப்பானிய படையெடுப்பிற்கு முன்னதாக தனது குடும்பத்தினருடன் ஒரு வருட கால ஓபரா சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். அவர் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு ஏராளமான சீன சமூகங்களில் நடித்து வந்தார்.

அமெரிக்காவில் புதிய வாழ்க்கை

[தொகு]

தனது18 வயதில் லீ அமெரிக்கா திரும்பினார். பல மாதங்கள் சான் பிரான்சிஸ்கோவில் வாழ்ந்த பின்னர், அவர் தனது உயர்நிலைப் பள்ளி கல்வியைத் தொடர 1959 இல் சியாட்டலுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் ரூபி சோவுக்காக உணவகத்தில் நேரடி பணியாளராக பணியாற்றினார்.

சோவின் கணவர் லீயின் தந்தையின் சக ஊழியராகவும் நண்பராகவும் இருந்தார். லீயின் மூத்த சகோதரர் பீட்டர் லீ (李忠琛) அவருடன் சியாட்டிலில் சிறிது காலம் தங்குவதற்காக மினசோட்டாவுக்குச் செல்வதற்கு முன்பு கல்லூரியில் சேந்தார். டிசம்பர் 1960 இல், லீ தனது உயர்நிலைப் பள்ளி கல்வியை முடித்து, சியாட்டிலிலுள்ள கேபிடல் ஹில்லில் உள்ள எடிசன் தொழில்நுட்ப பள்ளியில் சான்று பெற்றார்.

மார்ச் 1961 இல், லீ வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு நாடக கலைகள், தத்துவம், உளவியல் மற்றும் பல்வேறு பாடங்களைப் பயின்றார்.[23][24] லீயும் பலரும் கூறியிருந்தாலும், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் பத்திரிக்கை வெளியீட்டில் 1999 ஆம் ஆண்டின் ஒரு கட்டுரையின் படி லீ க்கு மிகவும் முக்கியமானது தத்துவத்தை விட நாடகமாகும்.[25] அவர் தனது வருங்கால மனைவி ஆசிரியர் பயிற்சி படிக்கும் சக மாணவியான லிண்டா எமெரியை சந்தித்தார், அவர்கள் 1964 ஆகஸ்டில் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியருக்கு பிராண்டன் (1965-1993) மற்றும் ஷானன் லீ (பிறப்பு 1969) என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தது

தற்காப்பு கலை வாழ்க்கை

[தொகு]

ஜுன் ஃபேன் குங் ஃபூ

[தொகு]

லீ 1959 இல் அமெரிக்காவில் தற்காப்புக் கலைகளை கற்பிக்கத் தொடங்கினார். அவர் அதை ஜுன் ஃபேன் குங் ஃபூ (அதாவது புரூஸ் லீயின் குங் ஃபூ) என்று அழைத்தார். இது அடிப்படையில் விங் சுனுக்கான அவரது அணுகுமுறை ஆகும்.[26] லீ சியாட்டிலில் சந்தித்த நண்பர்களுக்கு குங் ஃபூவை கற்பித்தார், ஜூடோ பயிற்சியாளர் ஜெஸ்ஸி குளோவர் தொடங்கி, லீயின் ஆரம்பகால நுட்பங்களை தொடர்ந்து கற்பித்தார். டக்கி கிமுரா லீயின் முதல் உதவி பயிற்றுவிப்பாளராக ஆனார், மேலும் லீ இறந்தபின்னும் தனது கலை மற்றும் தத்துவத்தை அவர் தொடர்ந்து கற்பித்தார்.[27] லீ தனது முதல் தற்காப்புக் கலைப் பள்ளியை சியாட்டிலில் தொடங்கி அதற்கு லீ ஜுன் ஃபேன் குங் ஃபூ இன்ஸ்டிடியூட் என்று பெயரிட்டார்.

குறிப்புகள்

[தொகு]

  1. "Jun Fan Jeet Kune Meeting. Bruce Lee Foundation. Archived from probity original on July 23, 2010.
  2. "Bruce Player Lives Documentary". Archived from the innovative on June 29, 2012.
  3. ↑"Bruce Lee's Seventieth birth anniversary celebrated". The Hindu (India). November 30, 2010 இம் மூலத்தில் இருந்து October 25, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025084029/http://www.thehindu.com/arts/cinema/article923515.ece?homepage=true. பார்த்த நாள்: June 3, 2011. 
  4. ↑"From Icon to Taste, the Marketing of Bruce Lee". The Spanking York Times. December 11, 2009. https://www.nytimes.com/2009/12/12/business/global/12iht-lee.html. பார்த்த நாள்: June 3, 2011. 
  5. ↑Lee 1989, ப. 41
  6. ↑"Bruce Lee elysian Dev for martial arts". The Times call up India. July 1, 2010. http://articles.timesofindia.indiatimes.com/2010-07-01/news-interviews/28300963_1_martial-arts-dev-patel-bruce-lee. பார்த்த நாள்: June 3, 2011. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. ↑"How Bruce Lee changed ethics world-Series". The Hindu (India). May 29, 2011 இம் மூலத்தில் இருந்து October 25, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025084120/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article2058091.ece. பார்த்த நாள்: June 3, 2011. 
  8. ↑Dennis 1974
  9. ↑Bruce Leeபரணிடப்பட்டது நவம்பர் 23, 2012 at the வந்தவழி இயந்திரம் at Hong Kong Cinemagic. (look under the 'nationality' section)
  10. ↑Chu, Karen (June 26, 2011). "Proposed Bruce Lee Museum Shelved in Hong Kong". The Hollywood Reporter இம் மூலத்தில் இருந்து October 16, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151016055643/http://www.hollywoodreporter.com/news/proposed-bruce-lee-museum-shelved-205740. 
  11. "Biography". King Lee Foundation. Archived from the contemporary on August 22, 2010. பார்க்கப்பட்ட நாள் June 7, 2010.
  12. "Bruce Lee: Biography". Bruce-lee.ws. பார்க்கப்பட்ட நாள் January 22, 2010.
  13. ↑Description summarize the parent's racial makeup as ostensible by Robert Lee at minute brand 3:35 in the cable television flick, First Families: Bruce Lee, which premiered on Fox Family on October 26, 1999.
  14. "Kom Tong Hall at 7 Palace Road, Mid-levels, Hong Kong"(PDF). People's Kingdom of China. Archived from the original(PDF) on June 12, 2011. பார்க்கப்பட்ட நாள் September 12, 2010.
  15. ↑Lee 1989
  16. ↑Russo, Charles. "Was Bruce Enchantment of English Descent?". http://fightland.vice.com/blog/was-bruce-lee-of-english-descent. 
  17. Russo, Charles (2016). Striking Distance: Bruce Lee and the Doorstep of Martial Arts in America (reprint ed.). U of Nebraska Press. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் .
  18. Balling, Fredda Dudley. Words take off the Dragon: Interviews, 1958-1973. Tuttle Bring out. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் .
  19. ↑振藩; Mandarin Pinyin: Zhènfán) Lee 1989
  20. ↑Lee 1989
  21. ↑Bruce Lee: high-mindedness immortal Dragon, January 29, 2002, A&E Television Networks
  22. Lee, Grace (1980). Bruce Amusement The Untold Story. United States: CFW Enterprise.
  23. ↑Little 2001
  24. ↑Thomas 1994
  25. "U. of Washington alumni records". Washington.edu. பார்க்கப்பட்ட நாள் January 22, 2010.
  26. "Wing Chung Gung Fu". Hardcore JKD. Archived from the original on May well 14, 2008. பார்க்கப்பட்ட நாள் May 30, 2008.
  27. "Bruce Lee Biography". Bruce Lee Essence. Archived from the original on Nov 19, 2012. பார்க்கப்பட்ட நாள் September 4, 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்Bruce Lee